மேலும்

60 இலங்கையர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியது பிரான்ஸ்

பிரான்சுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் அடைக்கலம் தேடிய 60 இலங்கையர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம், கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

120 இலங்கையர்கள் மீன்பிடிப் படகு  மூலம் கடந்த ஏப்ரல் 13ஆம் நாள், ரியூனியன் தீவைச் சென்றடைந்தனர்.

இவர்கள், 4000 கி.மீ பயணத்துக்குக்கு, 2350 தொடக்கம், 5580 வரையான யூரோக்களை ஒவ்வொருவரும் செலுத்தியிருந்தனர்.

மீன்பிடிப் படகின் மாலுமிகளான, இந்தோனேசியர்கள் மூவரும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, 60 இலங்கையர்கள் நேற்று விமானம் மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

2018 மார்ச் தொடக்கம், 273 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் அடைக்கலம் கோரியிருந்தனர்.  அவர்களில் 130 பேர் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர்.

அவர்கள் புகலிடக் கோரிக்கை தொடர்பாக, பிரான்சின் அகதிகள் டற்றும் நாடற்றவர்களின் பாதுகாப்புக்கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *