காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சகம் – அரசிதழ் வெளியீடு
அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களத்தைக் கொண்டு வந்திருந்தார்.
கடந்த கடந்த ஆறு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐதேகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கயந்த கருணாதிலகவின் கீழேயே, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு இருக்கிறது.
சிறிலங்கா வரலாற்றிலேயே, அரசாங்க அச்சக திணைக்களம், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறையாகும்.