மேலும்

ஐ.நா விசாரணைக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் – ரணில்

RANILசிறிலங்காவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“13வது திருத்தச்சட்ட வரையறைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எல்லா அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இதன்படி எல்லா மாகாணசபைகளுக்கும் சமமான அதிகாரங்கள் கிடைக்கும்.

பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்ட விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து வைத்த போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறி விட்டார்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணைக்குக் காரணம் மகிந்த ராஜபக்ச தான்.

அவர் இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதன் விளைவு தான் இந்த விசாரணை.

போர் முடிவுக்கு வந்தவுடன், விசாரணை ஒன்றை நடத்துவதாக அவரது அரசாங்கம் ஐ.நா பொதுச்செயலருக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

பின்னர், அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்,உறுதிப்படுத்தியிருந்தது.

ஆனால் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே தான் விசாரணைக் குழுவை ஐ.நா நியமித்தது.

எல்லாக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையே விசாரிக்கும் என்பதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும்.

குற்ற விசாரணைகள் அனைத்துக்கும் சிறிலங்காவின் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு அளிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *