மேலும்

Archives

மனோவுடன் கூட்டமைப்பு அவசர பேச்சு – கொழும்பு, கம்பகாவில் போட்டியிட முயற்சி

வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் போராளிகள் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.

மகிந்தவுக்கு இடமளிக்கமாட்டேன் – சந்திரிகாவுக்கு மைத்திரி வாக்குறுதி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகிந்தவுக்கு இடமளித்ததால் வெளியேறினார் சம்பிக்க – உள்ளே வந்தார் தினேஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

33 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை சந்தித்தார் மைத்திரி

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ள இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவிடம் மண்டியிட்டார் மைத்திரி – வேட்பாளராக நிறுத்த இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மைத்திரியைக் கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் போராளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2006ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, குண்டுவைத்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – அறிவித்தார் மகிந்த

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த வீட்டுக்குப் படையெடுத்துள்ள 60 வாகனங்கள் – முடிவை சற்று நேரத்தில் அறிவிக்கிறார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.