மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

போரில் இறந்த உறவுகளை நினைவுகூர தமிழருக்குத் தடையில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு நிதி சேகரித்த 5 ஈழத்தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தினால் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

போருக்குப் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில்

தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

புலிகள் மீண்டும் போருக்குத் திட்டமிடக் கூடும் – எச்சரிக்கிறது சிறிலங்கா அரசு

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து,  இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.