மேலும்

Tag Archives: மாகாணசபை

மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு அமைச்சர்கள் விவகாரம் குறித்து ஆராய முடிவு

வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண  அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

வடமத்திய மாகாண அதிகாரத்தைக் கைப்பற்ற மைத்திரியுடன் மகிந்த அணி பலப்பரீட்சை

வடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது – ரணில்

13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில் மாகாணசபை தேர்தல் – சிறிலங்கா அதிபரின் யோசனை முதலமைச்சர்களால் நிராகரிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ஒப்பமிடவில்லை – விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.