மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த

ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மைத்திரியுடன் பேசுமாறு மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கும் வெளிநாட்டு சக்தி

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு

விரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமத்திய மாகாண அதிகாரத்தைக் கைப்பற்ற மைத்திரியுடன் மகிந்த அணி பலப்பரீட்சை

வடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த அரசு பெற்ற கடன் 9.3 பில்லியன் டொலர்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பெறப்பட்ட 9.3 பில்லியன் டொலரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான குற்றச்சாட்டு – நழுவுகிறார் மகிந்த

அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியுள்ளார்.

சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார்? – சிங்கள ஊடகம் சூசக தகவல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று சூசகமான தகவலை வெளியிட்டுள்ளது.