மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

தம்பியைக் கைவிட்டு தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கமாட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கமாட்டார் என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்றுவார் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த எதிர்க்கட்சித் தலைவராக முடியாது – சந்திரிகா

எந்தச் சூழ்நிலையிலும், மகிந்த ராஜபக்சவினால், எதிர்க்கட்சித் தலைவராக வர முடியாது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடமே, அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

தெருமுனைக்கு வந்துள்ள சிறிலங்காவின் போர்க் கதாநாயகன்

வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும்.

மைத்திரியின் கடிதத்தை வெளியிடக் கூடாது – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை திரும்பத் திரும்ப வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள மகிந்த – ஏஎவ்பி

ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

மகிந்த மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகையாம்- சுசில் பிரேமஜெயந்த கூறுகிறார்

மகிந்த ராஜபக்ச மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகை இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் சுசில் பிரேமஜெயந்த.

தனது சுயசரிதையில் மகிந்தவின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சந்திரிகா

போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ரணிலுக்குப் பின்னால் மக்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் உளறிய மகிந்தவின் விசுவாசி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை மேடையில், வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.