மேலும்

Tag Archives: நியுயோர்க்

ஜெகத் டயஸ் நியமனம் – கருத்து வெளியிடாமல் நழுவினார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கருத்துக்காக காத்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜெகத் டயஸ் நியமனத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இறுதிக்கட்டப் போரில் அதிகளவான மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய, மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை, சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதற்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க்கில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் என்பதே ஐ.நாவின் நிலைப்பாடு – பான் கீ மூனின் பேச்சாளர்

உள்நாட்டு விசாரணைகளை நடத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நா பொதுச்செயலர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா கவலை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கவலை வெளியிட்டுள்ளார்.