மேலும்

Tag Archives: நாவற்குழி

கைது செய்யப்பட்டவர்கள் எங்கே என கேட்டவர்களுக்கு மரணச்சான்று தருவதாக கூறிய அரச தரப்பு

நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த உறவுகளுக்கு, மரணச் சான்றிதழ் தரமுடியும் என்று அரச தரப்பு சட்டவாளர் பதிலளித்துள்ளார்.

மேஜர் ஜெனரலைக் காப்பாற்ற சட்டமா அதிபர் திணைக்களம் முனைப்பு

நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் மூவர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள், நீண்ட காலதாமதம் ஆகி விட்டது என்று கூறி, அவற்றை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் கோரியுள்ளது.

மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை

நாவற்குழியில் சிறிலங்கா படையினர் 24 இளைஞர்களைக் கைது செய்து காணாமல் ஆக்கிய  சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி, யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு அரசியல்வாதிகளே நாவற்குழி விகாரை அபிவிருத்திக்கு தடை- விகாராதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.