மேலும்

Tag Archives: சீனா

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்

தெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு  விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.

சிறிலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

சிறிலங்காவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஊடக பயிற்சி அகடமிக்கு நிதியுதவியையும் நிபுணத்துவ ஆற்றலையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா- சிறிலங்கா இணக்கம்

பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் இணங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா படைகளை பலப்படுத்த சீனா நிபந்தனையற்ற ஆதரவு

சிறிலங்காவின் ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவதற்கு, தமது நாடு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் உறுதியளித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உரிமையைக் குறைக்கிறது சிறிலங்கா?

சீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாகக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை

சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.