மேலும்

Tag Archives: சிறிலங்கா

நௌரு, மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்?

அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவன உதவியுடன் திருகோணமலையில் பெருநகர திட்டமிடல் ஆய்வு

திருகோணமலைப் பெருநகரப் பிரதேசத்தில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா படைத் தளபதிகளுடன் பேச்சு

சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற பிரெஞ்சுப் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் லொயிக் பிசோட் நேற்று சிறிலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்துத் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா பவர்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எல்-நினோவின் பாதிப்பால் தென்னிந்தியா, சிறிலங்காவில் பெருமழை ஆபத்து – ஐ.நா எச்சரிக்கை

எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், சிறிலங்காவிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

அமைதிக்கான உறுதிப்பாட்டை சிறிலங்கா எப்படி நிரூபிக்க முடியும்? – அனைத்துலக ஊடகம்

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது மீளிணக்கம் தொடர்பாக தீவிர கரிசனை காண்பிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் சுதந்திரமானதொரு வாழ்வை வாழ்வதற்கான உதவியை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் சிறிலங்கா காவல்துறையினருக்கு வருகை நுழைவிசைவு

வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் சிறிலங்கா காவல்துறையினருக்கு, அந்தந்த நாடுகளில் வருகை நுழைவிசைவை வழங்கும் வகையில், அனைத்துலக காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.