சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரைச் சந்திக்கிறது யாழ். மீனவர்கள் குழு
சிறிலங்கா மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் அண்மைய காலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரை யாழ்ப்பாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நாளை சந்திக்கவுள்ளனர்.