மேலும்

Tag Archives: சிறிலங்கா

சிறிலங்காவின் நல்லிணக்கம், புனர்வாழ்வு குறித்து பேசினேன் – அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், புனர்வாழ்வு  நடவடிக்கைகள் குறித்தும், தாம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.

தேர்தல் முறை மாற்றம் குறித்து இரண்டு யோசனைகள்- அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்

சிறிலங்காவில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னை – கொழும்பு இடையே நான்காவது விமானசேவையை தொடங்குகிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளை நாளை முதல் அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் நாளொன்றுக்கு நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

கச்சதீவு மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது- சென்னையில் சிறிலங்கா அமைச்சர்

கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா

சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை

சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம்

வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஜோன் கெரி – அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.