விசாரணை அறிக்கையுடன் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கொண்டுள்ள கட்டுமான வளங்களின் அடிப்படையில், கொழும்பின் அனைத்துத் தேவைகளையும் இந்தியாவால் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்தியாவை விட வளங்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளின் முதலீடுகளையும் சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும்.
சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.
இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதா அல்லது சுயாதீன வெளியுறவுக் கோட்பாடு மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது தலைவிதியைத் தானே தீர்மானிப்பதா என்ற இரு வேறு தெரிவுகளை சிறிலங்காவின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இதுவரை முன்னணி வகித்து வந்த இந்தியாவை, முதல்முறையாக சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.