மேலும்

Tag Archives: அதிபர் தேர்தல்

கிராமிய அப்பாவிச் சிங்களரின் வாக்கு வங்கியை தனதாக்கும் திறன் மகிந்தவுக்கு உண்டா?

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர்.

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் பாரிய கட்சித் தாவல்?

சிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – புதுடெல்லி ஆய்வாளர்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவை புதுடெல்லி கூர்ந்து அவதானித்து வருவதாக, புதுடெல்லியை சேர்ந்த மூலோபாய விவகார ஆய்வாளர் நிதின் ஏ கோகலே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா பதிலடி

சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

நம்பகமான, அமைதியான தேர்தலை வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம்

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல், அமைதியாகவும், நம்பகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இடம்பெறுவது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் – மகிந்த தேசப்பிரிய

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டபடி, அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அமைதியான, நம்பகமான தேர்தலை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறார் பான் கீ மூன்

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் பிற்போடப்படாது – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு திரும்பிய சம்பந்தன் கூட்டமைப்பு பிரமுகர்களுடன் ஆலோசனை

மூன்று வாரங்களாக இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கொழும்பு திரும்பியதை அடுத்து, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.