மேலும்

Tag Archives: விடுதலைப் புலி

கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது

கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் ஆயுதக் கப்பல் நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு

களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் நேற்று நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்தனர்.

நரேந்திர மோடி அரசின் கொள்கை வகுப்பாளர்களைச் சாடுகிறார் கோத்தா

இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள், சிறிலங்காவை வேறுவிதமாகப் பார்த்தார்கள் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்?

இலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது.

புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – என்கிறார் சம்பிக்க

போரில் மரணமான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்- லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சரியான இழப்புகள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரி கொலை- புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

தெகிவளை சிறிலங்கா காவல் நிலைய புலனாய்வு அதிகாரி சுனில் தாப்ரு படுகொலை வழக்கில், விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான, செல்லத்துரை கிருபாகரனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை

வடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் – அவிழ்த்து விடுகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.