மேலும்

Tag Archives: விடுதலைப் புலி

வைகோ புலிகள் இயக்க உறுப்பினராம் – திருப்பி அனுப்பியது மலேசியா

தமிழ்நாட்டின் மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.

இந்தியாவுக்காகவே புலிகளுடன் போரிட்டேன் – மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் இந்தியாவுக்காகவே போரை நடத்தியதாகவும் இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போரின் இறுதியில் கைப்பற்றப்பட்ட 37.7 கிலோ தங்கத்தை உரிமையாளர்களிடம் மீளளிக்க நடவடிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்தும், கைவிடப்பட்ட வீடுகளில் இருந்தும் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட 1 பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏ னைய பெறுமதிமிக்க ஆபரணங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை, சரணடைந்ததை யாரும் காணவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத-  கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

புலிகளின் நினைவுச் சின்னங்களை மீளமைக்க வேண்டும் – மனோரி முத்தெட்டுவேகம

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்தார்.

மேலும் நான்கு ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஆவா குழுவுடன் இணைந்து வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மடுவில் கண்ணிவெடி அகற்றினார் மங்கள – ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம்

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

மகிந்தவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறார் அவரது பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.