ராகம, கந்தான, வத்தளையில் நேற்றிரவு சிறிலங்கா படைகள் பாரிய தேடுதல்
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ராகம, கந்தான, வத்தளை, ஜாஎல பிரதேசங்களில் நேற்றிரவு சிறிலங்கா படைகளும், காவல்துறையினரும் இணைந்து, பாரிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ராகம, கந்தான, வத்தளை, ஜாஎல பிரதேசங்களில் நேற்றிரவு சிறிலங்கா படைகளும், காவல்துறையினரும் இணைந்து, பாரிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர்.