கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.




