மேலும்

Tag Archives: புதுடெல்லி

மைத்திரியிடம் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – இரா.சம்பந்தன் கோரிக்கை

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய  சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லியை கவலை கொள்ள வைத்துள்ள சிறிலங்காவின் குழப்பமான சமிக்ஞைகள்

சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் திட்டங்களை எதிர்ப்பேன் என வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனைத் தற்போது மீறிவருகிறது.

யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார் மோடி

வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு

தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.

திருப்பி அழைக்கப்படும் 27 தூதுவர்களில் முன்னாள் படைத்தளபதிகளும் நால்வர்

அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

வடக்கில் இருந்து படைகள் குறைக்கப்படும் – புதுடெல்லியில் மங்கள வாக்குறுதி

புதிய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் படைக்குறைப்பைச் செய்யும் என்றும்,  போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை நடத்தும் என்றும், புதுடெல்லியில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

மோடியைச் சந்தித்தார் மங்கள சமரவீர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மதியம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.(இரண்டாம் இணைப்பு)

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப விரைவில் நடவடிக்கை? – புதுடெல்லியில் முக்கிய பேச்சு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவது குறித்து, இந்திய-சிறிலங்கா அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.