மேலும்

Tag Archives: சீனா

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவு கிடைப்பது உறுதி – சிறிலங்கா நம்பிக்கை

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் யோசனைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் ஆதரவு கிடைக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஏற்கும் அளவுக்கு தீர்மான வரைவை பலவீனப்படுத்தும் இந்தியா? – இறுதிநேரத்தில் களமிறங்கும்

சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் பரந்தளவிலான சம்மதத்துடன் கூடிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்பகரமான புதுடெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டுபட்ட நிலையில் அனைத்துலக சமூகம் – ஜெனிவா கூட்டத்தில் நடந்தது என்ன?

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவுக்கு எதிராக – சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,  கியூபா ஆகிய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் முக்கிய திருப்பம் – அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ரஸ்யா, சீனாவும் ஆதரவு?

ஜெனிவாவில் முக்கிய திருப்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா கொண்டு வரவுள்ள, சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளும் ஆதரவளிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்

சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது  பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.

சீனாவின் ஆதரவு இல்லையென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது – சரத் பொன்சேகா

30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

தென்னாபிரிக்க அதிபர் சூமாவை கட்டுநாயக்கவில் சந்தித்துப் பேசினார் மங்கள சமரவீர

சீனா செல்லும் வழியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?

இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

ராஜபக்சவின் தோல்வி சீனாவுக்கு சிறந்த பாடம்- கேணல் ஹரிகரன்

சீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.