மேலும்

Tag Archives: கட்டுநாயக்க

சிறிலங்காவில் இந்தோனேசிய அதிபர் – முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சு

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா வந்தார் மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், மலேசியப் பிரதமர் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.

விரைவில் கைதாகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கட்டுநாயக்கவில் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.

சீனப் பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்ட எவ்-7 போர் விமானங்கள் விமானப்படையிடம் கையளிப்பு

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள விமானங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் அலகு, முதல்கட்டமாக சீனத் தயாரிப்பான இரண்டு எவ்-7 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது.

துறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், தொடருந்துப் பாதை

1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.