இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 க்கும் மேற்பட்டோர் சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப் படைகளின் ஆறாவது பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் மையங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதை, நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகள் குறித்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிடம் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.