மேலும்

Tag Archives: அவுஸ்ரேலியா

திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்

உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துக் கப்பல்களை வழங்குகிறது அவுஸ்ரேலியா

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன.

நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடும் பாதுகாப்புடன் இரு சிறப்பு விமானங்களில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய 26 இலங்கையர்கள்

இரண்டு நாடுகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்களுடன், இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.

முன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.