மேலும்

சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த கொள்கையை வகுக்கவுள்ளதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையினர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

எல்லைநிர்ணயப் பணிகள் முடிந்த பின்னரே மாகாணசபைகளுக்கு தேர்தல்

எல்லை மீள்நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது என்று  சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

குசால் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை

குசால் பெரேராவினால் எழுதப்பட்ட “Rajapakse the Sinhala Selfie”  என்ற  நூலின் வெளியீட்டு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.  கொழும்பு இலங்கை மன்றக் கல்லுரியில் கடந்த 12ஆம் நாள் நடந்த இந்த நிகழ்வில்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் முழுமையாகத் தரப்படுகிறது.

வெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு

கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது. புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் அது வெளியிடப்படும் என்றும் நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

158.5 மில்லியன் டொலருக்கு ரஷ்ய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

ரஷ்யாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது.

ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – கொழும்பு வருமாறும் அழைத்தார்

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூடி 70 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் 3ஆம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சீன நிறுவனங்களுடன் சிறிலங்கா பேச்சு

அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே, 3 பில்லியன் டொலர் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, இரண்டு சீன நிறுவனங்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக உயர்மட்ட சிறிலங்கா அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.