‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’*
கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.