மேலும்

பிரிவு: செய்திகள்

லசந்த கொலையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் புதுடெல்லிக்கான இரகசியப் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபையிடம் – கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமனம்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவா குழுவை உருவாக்கியது சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரியே – ஆங்கில ஊடகம் தகவல்

ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சிக்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 3000 தொட்டிகளை அமைக்கவுள்ளது இந்தியா

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

மதிப்புக் கூட்டு வரி திருத்தச்சட்டம் நிறைவேறியது – வாக்கெடுப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.

ஆவா குழுவை வேட்டையாடும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை

சுன்னாகத்தில் இரண்டு சிறிலங்கா காவல்துறை புலனாய்வாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘நிமலராஜனைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்’ – பிரியத் லியனகே

மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.

மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா காவல்துறை கண்டிப்பான உத்தரவை அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது.