மேலும்

பிரிவு: செய்திகள்

மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரப்பட்ட ‘அரசியலமைப்பு சதி’யின் ஓராண்டு நினைவு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் நாள் இடம்பெற்ற அரசியலமைப்புச் சதியின், முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டது.

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி தங்கேஸ்வரி காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமர் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் நேற்று காலமானார்.

சமூக ஊடகங்களில் தேர்தல் முடிவுகள் கசிவதை தடுக்க நடவடிக்கை

அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோத்தாவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சீனத் தூதுவர்

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டுள்ளார்.

இறுதி முடிவுக்காக நாளை மறுநாள் கூடும் ஐந்து கட்சிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட, ஐந்து தமிழ்க் கட்சிகளும், நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசவுள்ளன.

மீறல்களில் ஈடுபட்ட படையினருக்கு விடுதலை – தேர்தல் அறிக்கையில் கோத்தா வாக்குறுதி

போரின் போது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து சிறிலங்கா படையினரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

படையினர் பொதுமக்களை குறி வைத்ததற்கு ஆதாரம் இல்லை – ராஜித

போரின் போது சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் ஆணை கோரும் மகிந்த, கோத்தா

நாடாளுமன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கான மக்கள் ஆணையை, அதிபர் தேர்தலில் வழங்குமாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை – இன்று வெளியாகிறது

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்படவுள்ளது.