மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

படுகொலைச் சதித் திட்ட விசாரணை- ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்  ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில் சேரவில்லை – மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொள்ளவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விரைவில் ஐதேக வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

வரவேற்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன்

சபாநாயகர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தப்புமா மகிந்தவின் பதவி? – சுமந்திரனின் கேள்வியால் சிக்கல்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவை அறிவிக்கவுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு – சீனா வரவேற்பு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட்டிருப்பதை, சீனாவும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பந்தனின் பதவி பறிபோனது – எதிர்க்கட்சி தலைவராக மகிந்த நியமனம்

சிறிலங்கா  நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

அரசில் இணைய சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு தடை – மைத்திரி அதிரடி

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும், அதிபருமான மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார்.