மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன.

இரத்மலான விமானப்படைத் தளம் அருகே விமானப் பயிற்சிக்கு தடை

இரத்மலான விமானப்படைத் தளத்துக்கு அருகில், விமானம் ஓட்டும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு

சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பான படங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சஹ்ரான் குழுவின் 7 பில்லியன் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 7 பில்லியன் ரூபா சொத்துக்களையும், 140 மில்லியன் ரூபா பணத்தையும் முடக்கி வைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு சிறைத்தண்டனை

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளை இன்று திறக்க வேண்டாம்- மகாநாயக்கர்கள் கோரிக்கை

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை இன்று ஆரம்பிக்கும் முடிவை மீளாய்வு செய்யுமாறு மல்வத்த, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் மீண்டும் நேற்றிரவு தொடக்கம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் நேற்றுமாலை வெடித்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை

சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கிற்குள் குண்டு வாகனங்கள்  – பீதியடைய வேண்டாம் என்கிறது இராணுவம்

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற  தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.