மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா நிதியமைச்சரின் தலை தப்புமா? – ஜூலை 6இல் தெரியும்

சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் ஜூலை 6 ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மைத்திரி – மகிந்த இடையே இணக்கத்தை ஏற்படுத்த சுதந்திரக் கட்சியில் ஆறு பேர் கொண்ட குழு அமைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமனம்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் கடலுணவுகளைக் குறிவைக்கிறது சீனா

சிறிலங்காவின் கடலுணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் யுனான் மாகாணம் ஆர்வம் காட்டி வருவதாக மாகாண உதவி ஆளுனர் காவோ சூசன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளித்தார் மைத்திரி

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் அரசியல் கைதிகள் எவருமில்லை – கைவிரிக்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர்

சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவைக் கூட்டுமாறு கூட்டணிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன.

மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார்.

வித்தியா படுகொலையை அடுத்து புங்குடுதீவை விட்டு வெளியேறும் குடும்பங்கள்

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.