மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது

சிறிலங்கா விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு சிறிலங்கா தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கக் கூடும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவை ஓரம்கட்டவில்லை – என்கிறது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு

சிறிலங்கா அரசாங்கம் சீனாவை ஓரம்கட்டுவதற்கு முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு யாழ்.நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மாத்தறை அணிவகுப்பில் ‘காணாமற்போன’ மிக்-27 போர் விமானங்கள்

மாத்தறையில் நேற்று நடத்தப்பட்ட சிறிலங்காவின் படை வலிமையை வெளிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பில், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள மிக் போர் விமானங்கள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாவுக்கு எதிராக அடுத்தடுத்துப் பாயவுள்ள குற்றவியல் வழக்குகள்

முறைகேடான வகையில் ஆயுதங்கள் மற்றும் போர்த்தளபாடக் கொள்வனவுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களை அமைதியாக்கி விட்டோம் என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை – கரு ஜெயசூரிய

உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பது தொடர்பான எந்த முடிவையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் பொது நிர்வாக உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக நல்லாட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.