மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நாடாளுமன்றத் தேர்தலால் உள்ளக விசாரணை தாமதம் – மங்கள சமரவீர

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படுவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

9 புதிய தூதுவர்களை உறுதிப்படுத்தியது சிறிலங்கா – இருவர் படை அதிகாரிகள், ஒருவர் தமிழர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரின் விபரங்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தலுடன் முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு – நீதிமன்றில் காவல்துறை தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை – காவல்துறையின் தவறுகள் குறித்த விசாரணை அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6ஆம் நாளுக்குள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 6ஆம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக தீர்மானிக்கவில்லை – ஜோன் செனிவிரத்ன

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளை, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவில் இன்புளூவென்சா வைரசுக்கு இதுவரை 32 பேர் பலி – வடக்கிற்கும் பரவியது

சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன

நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.