மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து ஆராய தென்னாபிரிக்கா செல்கிறது சிறிலங்கா உயர்மட்டக் குழு

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படும் – சிறிலங்காவின் நீதியமைச்சர் தகவல்

காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு கலைக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட இருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் முக்கிய பிரமுகர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகிய இருவரையும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கொலை வழக்கில் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானிய நாடாளுமன்றில் ரணில் உரை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். சிறிலங்கா நேரப்படி இன்று காலை ரணில் விக்கிரமசிங்கவின் இந்த உரை இடம்பெற்றது.

மேலதிக நிதியுதவிகளை அனைத்துலக நிதி நிறுவனங்களிடம் கோரவுள்ளது சிறிலங்கா

சிறிலங்காவுக்கு மேலதிக நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்த, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெருவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்- அனைத்துலக அமைப்புகள் கூட்டறிக்கை

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, அனைத்துலக மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.

பிரகீத் கடத்தல் குறித்து மேஜர் ஜெனரலிடம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட நம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை் விசாரணை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அவுஸ்ரேலியா முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.