மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் ஆரம்பம்

மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது.

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.

சிறிலங்காவுடனான இராணுவப் பயிற்சியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லை – என்கிறது சீனா

சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பயிற்சித் திட்டங்களில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லின் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க திரும்பிய போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பின்கதவால் தப்பிச் சென்றார்

துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பல முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா விசாரணை அறிக்கை – சிறிலங்காவுக்கு 5 நாட்கள் காலஅவகாசம்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை தொடர்பாக பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.

செய்மதிப் பயன்பாடு குறித்த உடன்பாட்டில் இந்தியாவுடன் கையெழுத்திடுகிறார் ரணில்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கான (சார்க்) செய்மதி தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன்  உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளார்.