மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்களை சிறிலங்காவில் மாற்றுவது எப்படி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றவையாக அறிவித்ததையடுத்து, சிறிலங்காவில் இந்த நாணயத் தாள்களை வைத்திருக்கும் பெருமளவானோர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

ஒபாமாவின் சிறிலங்கா பயணத்தை தடுத்த வெசாக் கொண்டாட்டங்கள்

கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், வெசாக் கொண்டாட்டங்களால் அந்தப் பயணம் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம்

சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இன நல்லிணக்கத்துக்கு அவசியமான விடயங்களைப் புறக்கணித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த கருத்துக்களுக்காக சீனத் தூதுவர் வருத்தம்

அண்மையில் தாம் வெளியிட்டகருத்துகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமை – சிறிலங்கா அதிபர்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது தனது பொறுப்பு மாத்திரமல்ல, கடமையும் கூட என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’  ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆவா குழுவுடன் தொடர்புடைய சிப்பாய் கைது குறித்து சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாதாம்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

ஆவா குழுவை சிறிலங்கா இராணுவம் உருவாக்கியதாக கூறவில்லை – ராஜித சேனாரத்ன

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சிறிலங்கா இராணுவத்தினரே உருவாக்கினர் என்று தான் கூறவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

வவுனியாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பணியகத்தை (கொன்சூலர்) யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மூன்று ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற பெயரில் குழப்பம் விளைவிக்க முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று இளைஞர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.