மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பிரகீத் கடத்தல் வழக்கில் கைதான அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் மூலம் பேசக் கூடாது – சீனத் தூதுவருக்கு சிறிலங்கா ‘குட்டு’

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.  கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை நீக்கத்தை மீளாய்வு செய்யக் கோருகிறார் பீரிஸ்

தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என்று, முன்னாள் வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவின் பின்னால் இராணுவமும் இல்லை, அரசியலும் இல்லையாம்

வடக்கில் இராணுவ, அரசியல் பின்னணியுடனோ, அரசாங்கத்தின் பின்புலத்துடனோ ஆவா குழு செயற்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மூன்று கோரிக்கைகள் – நிராகரித்தது சிறிலங்கா

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை சிறிலங்கா அமைச்சர்கள் நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனத் தூதுவருக்கு அழைப்பாணை அனுப்பவுள்ளார் மங்கள சமரவீர – முற்றுகிறது முறுகல்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்கிற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை விடுக்கவுள்ளார்.

சிறிலங்கா அமைச்சர்கள் மட்டக்குழுவில் சுமந்திரன் – அரச குழுவுடன் இந்தியா செல்கிறார்

இந்தியா செல்லும் சிறிலங்காவின் அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கைத்தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தும் சிறிலங்கா – சீனாவுக்கு 50 சதுர கி.மீ நிலம்

கைத்தொழில்மயமாக்கல் நடவடிக்கைக்காக சிறிலங்காவின் தென்பகுதியில் சீன வர்த்தகர்களுக்கு 50 சதுர கி.மீ நிலப்பகுதியை வழங்கவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் விவகாரம் குறித்து புதுடெல்லியில் இன்று இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினை குறித்து, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளன.