மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு?

புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உட்தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட சந்திப்பு

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைவிலங்குடன் சிறிலங்காவின் கட்டளைத் தளபதி

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர நேற்று கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மாநாடு – திங்களன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டுதோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, ‘காலி கலந்துரையாடல்-2016’ , வரும் 28ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான, பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவு சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கேட்கிறார் பசில் – ராஜபக்சகளின் திருகுதாளங்கள்

நீரிழிவு நோய்க்கு மருத்துவ உதவியைப் பெறுவதற்கு அமெரிக்கா செல்வதற்கு மூன்று மாத அனுமதியைத் தர வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.

சம்பந்தனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் நேற்று கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இராணுவம் அதிகாரத்துக்கு வருவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது

சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.