மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு – கிளம்புகிறது சர்ச்சை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்,  லோறன்ட் நடத்திய பேச்சுவார்த்தை, அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘ஐ.எஸ்’ அமைப்பு குறித்து ‘றோ’ எச்சரிக்கவில்லை – கருணாசேன ஹெற்றியாராச்சி

இலங்கையர்கள் இஸ்லாமிய தேசம் எனப்படும் ‘ஐஎஸ்’ அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பாக, இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ எந்த எச்சரிக்கை அறிக்கையையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனியான சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கடற்படை நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, காலி கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள கோல்பேஸ் விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஞானசார தேரரை சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பிய இந்திய குடிவரவு அதிகாரிகள்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

சிறிலங்கா குறித்த ஐ.நாவின் நிலைப்பாடு மாறாது – பர்ஹான் ஹக்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் விடயத்தில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

“ மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவியுங்கள்”- ட்ரம்பிடம் தஞ்சமடையும் சிறிலங்கா அதிபர்

மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

காவல்துறை தடைகளை மீறி தீபம் ஏற்ற தயாராகிறது கூட்டமைப்பு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா காவல்துறை உத்தரவுகளை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.