மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று,  சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் – இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுடன் உடன்பாடு

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பாக சீனாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இராணுவப் புரட்சி – எச்சரித்தார் தினேஸ், நிராகரித்தார் ராஜித

சிறிலங்காவில் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள்

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மகிந்த ஆட்சியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை – 87 பேர் தாக்கப்பட்டனர்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் சிறிலங்காவில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களின் குழு – 150 தொழிற்சாலைகளை அமைக்க திட்டம்

சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது – கூட்டமைப்பும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தின், 2007ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்,  107 மேலதிக வாக்குகளினால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது – டிசெம்பர் 2 வரை விளக்கமறியல்

நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தவராசா நீக்கம் – மகிந்த அமரவீர

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு மகிந்த எதிர்ப்பு

முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.