மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வரவுசெலவுத் திட்ட உரையின் போது தூங்கிவழிந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தூக்கிக் கொண்டிருந்ததை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு வரும் சமந்தா பவர், நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் – கூட்டமைப்புடனும் சந்திப்பு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உறுதி

தனது பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேசும் தருணம் இதுவல்ல – மாவை சேனாதிராசா

உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

சிறிலங்காவுக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்து தமது பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சியை ஒழிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரத்தை நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன் சீமெந்து ஆலையை அழித்து விட்டார்கள் – முகாமையாளர் குற்றச்சாட்டு

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, எமது சிறிலங்கா படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக, விசனம் வெளியிட்டுள்ளார் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி.

அடுத்த கட்டம் குறித்து ஆராய நாளை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நாளை கூடி ஆராயவுள்ளனர்.