மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கலைக்கப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டுள்ளது.

உருவானது சஜித் தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சஜித் கூட்டணி உருவாக்கும் நிகழ்வை புறக்கணிக்கிறார் ரணில்

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.

யானைக்கே ஐதேக செயற்குழு ஆதரவு – சஜித் முரண்டு

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.

வேலைவாய்ப்பு நேர்காணல் குழுவில் இராணுவ அதிகாரிகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்த குழுவில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமை குறித்து, கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொருளாதார வளர்ச்சிக்கு நல்லிணக்கம் முக்கியம்’ – பிரான்ஸ் இராஜதந்திரி

தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வதை, முடிவுக்குக் கொண்டு வந்து இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

தூதரகப் பணியாளருக்குப் பிணை – வரவேற்கிறது சுவிஸ்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களம் வரவேற்றுள்ளது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார்.