மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வெறும் கையுடன் திரும்பிய சிறைச்சாலை அதிகாரிகள் – தனியார் மருத்துவமனையில் ராஜித

கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை நேற்று கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

வடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.

ராஜித தொடர்ந்தும் மருத்துவமனையில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சற்று முன்னர் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது – மல்வத்த அனுநாயக்கர்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த பிக்குகள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட கடத்தலுக்கு சம்பிக்கவே பொறுப்பு – குற்றம்சாட்டுகிறார் மேஜர் அஜித்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே பொறுப்பு என, பதில் காவல்துறை மா அதிபரிடம் தாம் கடந்த 21ஆம் நாள் முறைப்பாடு செய்திருப்பதாக, சட்டவாளரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்குப் பின் அலரி மாளிகையை தேடிச் சென்ற மைத்திரி

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆகியோருடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கோத்தா கொலை முயற்சி வழக்கு – அரசியல் கைதிக்கு 14 ஆண்டுகளின் பின் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார்  என்ற  குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ்  அரசியல் கைதி ஒருவர், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

ஜெனிவா அமர்வுக்குத் தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  மார்ச் மாத அமர்வின் போது  அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருகிறது.

உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.