மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது உள்ளிட்ட, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே உள்ளதாம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது பற்றி சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்யும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறையாண்மை உரிமை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரியை வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கவில்லை – சந்திரிகா

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க

2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்

அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

இத்தாலிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நாளை கொழும்பு வருகிறது

இத்தாலிய கடற்படையின் பலநோக்கு ஐரோப்பிய போர்க்கப்பலான ITS Carabiniere நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகளே ஒதுக்கீடு

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு 1235 ஏக்கர் காணிகள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை

அம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2020இல் மைத்திரியை போட்டியில் நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு

அடுத்த அதிபர் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எவரையும் அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் நீடிக்கும், யாராலும் இதனைக் கவிழ்க்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.