மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் வெடித்தது மோதல் – 21 பேர் காயம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் 3 மணிநேரம் ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை – இரத்தக்களரியை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

புலிகளின் நினைவுச் சின்னங்களை மீளமைக்க வேண்டும் – மனோரி முத்தெட்டுவேகம

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை உடன்பாடுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.