மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கண்டியில் பழுதடைந்த மோடியின் உலங்குவானூர்தி இந்தியாவுக்குப் புறப்பட்டது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி திருத்தப்பட்ட பின்னர் இன்று புறப்பட்டுச் சென்றது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை – வெள்ளிக்கிழமை கிடைக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிலங்காவுக்கான பணியகம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறிலங்கா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன அதிபர் வாக்குறுதி

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கூட்டு ஆட்சி தொடர இந்தியா உதவ வேண்டும்- மோடியிடம் கோரிய சம்பந்தன்

சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமருடன் மகிந்த நடத்தியது இரகசியப் பேச்சு – விபரம் வெளியிட மறுக்கிறார் பீரிஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.