மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

செவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

புதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு

தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது.

அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

16 மாதங்களாக வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் யாழ்., முல்லை., அம்பாறை மாவட்டங்கள்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 16  மாதங்களாக  இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இன்று முதல் சிறிலங்காவுக்கு மீளக் கிடைத்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இரண்டாவது பேச்சு

அமெரிக்க, சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுக்கு இடையிலான, இரண்டாவது அதிகாரிகள் மட்டப் பேச்சு நடந்து முடிந்துள்ளது.

தடையை மீறி தலதா மாளிகைக்கு மேலாக பறந்ததா மோடியின் உலங்குவானூர்தி?

கண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் சிறிலங்கா அதிபர்

அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் இடைநிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று திடீரென அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.