மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.

சீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.

சீனா சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வடமத்திய மாகாண அதிகாரத்தைக் கைப்பற்ற மைத்திரியுடன் மகிந்த அணி பலப்பரீட்சை

வடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது – சஞ்சய் பாண்டா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின், இந்தியப் பெருங்கடல் விவகாரங்களுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியை பின்னிரவில் வலியச் சென்று சந்தித்தார் மகிந்த

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மோடிக்கு இராப்போசன விருந்து அளித்தார் மைத்திரி – சம்பந்தன், விக்கியும் பங்கேற்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.