மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

புலிகளின் மீள் எழுச்சி அச்சுறுத்தல் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பதவி விலகவுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி விரைவில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனம்

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக, சிறிலங்காவின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

3 மாகாணசபைகளுக்கு வேட்புமனுக் கோரும் வர்த்தமானி ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியாகும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல், ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் அதாவுல்லா? – தேடி வந்த பதவியை பசீர் நிராகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 9 இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உதய கம்மன்பில

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மேலும் 9 இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலராக செவ்வாயன்று பதவியேற்கிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, மூத்த சிவில் சேவை அதிகாரியும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகளை நாளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.